அக்குபஞ்சர் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஊசிகள் பாதுகாப்பானதா?

அக்குபஞ்சர் மருத்துவம் என்பது பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், உபாதைகளுக்கும் நிவாரணம் அளிக்க நம் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் ஊசிகளைச் செருகுவதை உள்ளடக்கிய சிகிச்சை முறை ஆகும். நம் உடலில் நேர்த்தியான ஊசிகளைச் செருகுவதற்கான இந்த அக்குபஞ்சர் மருத்துவ முறையை, பலர் 'அபாயகரமான' அல்லது 'பாதுகாப்பற்றதாக' ஒரு மருத்துவ முறை என்று நினைக்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அக்குபஞ்சர் மருத்துவம் மிகவும் பாதுகாப்பான ஒரு மருத்துவ முறையாகும். மேலும், நீங்கள் ஒரு திறமையான அக்குபஞ்சர் மருத்துவரை அணுகினால் அக்குபஞ்சர் மருத்துவத்தால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகும். டிஸ்போஸபிள் ஊசிகள் என்று சொல்லக்கூடிய ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் ஊசிகளை பயன்படுத்துவதன் மூலம் தொற்றுநோய்க்கான அபாயமும் இதில் மிகவும் குறைவு. ஒரு சாதாரண ஊசியைப் போலன்றி, அக்குபஞ்சர் மருத்துவ ஊசியின் நுனி கூர் முனையைக் கொண்டு இருக்காது. மாறாக இதன் முனை வட்டமான வடிவத்தைக் கொண்டுள்ளது. இது திசு இழைகளைத் வெட்டுவதை விட அவற்றைத் அழுத்தவே உதவுகிறது. Fix an appointment with us by calling us at (91) 97898-16531, and ...